நாடு திரும்பிய இலங்கையர்கள்மத்திய கிழக்கின் இரு நாடுகளில் இருந்து 472 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொழில் நிமித்தம் காரணமாக  ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்றிருந்த 405 இலங்கையர்கள் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான E.K-648 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 2.02 மணியளவிலும்,கட்டாரின் தோஹா நகரில் இருந்து கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான Q.R – 668 எனும் விமானம் ஊடாக 67 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ள அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்குப் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: