தேசிய ரீதியிலான போட்டி நிகழ்ச்சியில் பங்குப்பற்றி முதலிடத்தினைப் பெற்றக்கொண்ட மாணவர்கள்


"நாட்டுக்கு பெறுமதியான நூலொன்று எழுதும் திட்டம் " தேசிய ரீதியிலான போட்டி நிகழ்ச்சியில்  மட்/பட்/மண்டூர் மகா வித்தியாலயத்தைச்  சேர்ந்த இரண்டு மாணவர்கள் பங்குபற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் தரம் 6-10 பிரிவில் கவிதையில் முதலாம் இடத்தினை தரம் 10ல் கல்வி பயிலும் செல்வன் அல்பேட் அமருசாந்த் பெற்றுக்கொண்டுள்ளதோடு,தரம் 11-13 பிரிவில் சிறுகதைப் போட்டியில் செல்வி.நாராயணபிள்ளை லக்சனா( தரம் 12 )முதல் நிலையினையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..  

மேற்படி போட்டியானது கடந்த கொரோனா  விடுமுறை காலத்தில் நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது . இப் பாடசாலையின் ஆசிரியையான திருமதி K.லவகுமார் மாணவர்களை நெறிப்படுத்தி வழிப்படுத்தியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: