எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்


திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வியாழக்கிழமை மாலை அறிவித்த பிறகு அவரது உறவினர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்து எஸ்.பி.பியின் குடும்பத்தினரை நடிகர் கமல் ஹாசன் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.பி.பி நலமுடன் இருக்கிறார் என சொல்ல முடியாது, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று மட்டுமே கூற முடியும் என்று தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக நேற்று  மாலை 6.30 மணிக்கு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: