வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்த தடை


 கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே ஜனாதிபதி," பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு" குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மானிக்கும் பணிகளை 2024 நிறைவு செய்து முக்கியமான வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சௌகரியமாகவும், விரைவாகவும்,பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது சகல பிரஜைகளினதும் உரிமையாகும்.சிறிய பாலங்கள்,மரப்பாலங்கள் மற்றும்  கம்பிப் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்கள் நிர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில மாதங்களில் 8 ஆயிரம் கிலோ மீற்றர் வரை வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதில் 400 கிலோமீற்றர் நிர்மானப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவைளை பிரதான நெடுஞ்சாலைகளின் இரு புறங்களிலும் 2 மில்லியன் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நாட்டுவதற்கும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது

No comments: