கூட்டமைப்பினர் மீண்டும் மக்களை குழப்ப முயற்சிக்கின்றனர் -சந்திரகுமார்

ஆரையூர் ரகுதாஸ்

வலிந்து காணாமற்போனோர் சங்கத்தவர் என்ற போர்வையில் பணமும் குளிர்பானமும் கொடுத்து இளைஞர்களை அழைத்துவந்து தேவையற்ற ஆர்பாட்டங்களை நடாத்தி தமிழ்மக்களை மீண்டும் தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் குழப்பிவருவதாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன கட்சியின் மாவட்ட பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆத்திரத்தோடு கருத்துக்களை தெரிவித்தார் 

இக்கருத்தினை தாங்களும் ஆமோதிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட காணாமற்போனார் சங்கத்தினரும் இவ்வூடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டனர் 

சர்வதேச காணாமற்போனோர் தினத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் காணாமற்போனாரின் உறவினர்கள் என்ற போர்வையில் பலரை பணம்கொடுத்து அழைத்துவந்து தமிழ்மக்களை திசைதிருப்பும் நோக்குடன் ஆர்பாட்டங்களை முன்னெடுத்ததாகவும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் காணாமற்போனார் சங்கத்தினரோ அவர்களுடைய உறவினர்களோ கலந்து கொள்ளவில்லை 

எனவும் காணாமற்போன தமிழ் உறவுகளை வைத்து தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் காலங்காலமாக கபட நாடகம் ஆடுவதாகவும் தங்களுக்கான எந்தவொரு வாழ்வாதார உதவிகளையோ வேலைவாய்புக்களையோ இதுவரை அவர்கள் பெற்றுத்தரவில்லை 

எனவும் தங்களை புலம்பெயர் உறவுகளிடம் காட்டி பணம் பெற்று தங்களது பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டுவருவதாகவும் மிகவும் அழுத்தமாக மனவேதனையோடு கருத்துரைத்தனர் 

இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளர்  பரமசிவம் சந்திரகுமார் காணாமற்போன உறவுகளினுடைய பிரச்சனைகளை பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைத்துள்ள அதிமேதகு ஐனாதிபதியின் கவனத்திற்கு துரிதகதியில் கொண்டு சென்று அக்குடும்பங்களிற்கான வாழ்வாதார வேலைவாய்ப்பு உதவிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார் அத்தோடு காணாமற்போன சங்கத்தினரிடமிருந்து அம்மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் உள்ளடங்கிய கோரிக்கை கடிதங்களையும் கையேற்றார்No comments: