வழமைக்கு திரும்பிய ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்


கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தள பிரிவு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது நேற்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலதாமாளிகையின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டது. சில மணிநேரம் குறித்த இணையத்தளம் செயலிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்,இணையத்தளத்தை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் குறித்த இணையத்தளம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: