கொரோனா தொற்றினால் சவூதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கையர்கள்


சவூதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும்,இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்நாட்டினதும், சர்வதேச சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments: