நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிதுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 6 பேர், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 5 பேர், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த 4 பேர் மற்றும்  கட்டார், வியட்நாம் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த தலா ஒவ்வொருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3253 ஆக அதிகரித்துள்ளது.

No comments: