பொது மக்களுக்கான முக்கிய செய்தி


சமூக வலைதளங்களின் மூலம் விளம்பரங்களைப் பிரசாரம் செய்து பண மோசடியில் ஈடுபடும் திட்டமிட்ட குழுவிடம் சிக்கி கொள்ள வேண்டாம் என காவற்துறை தலைமையகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி செயல்கள்  தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் காவற்துறை தலைமையகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும்,குறித்த திட்டமிட்ட தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி பிரிவிற்கு அறிக்கையிட்டுள்ளதாகவும் காவற்துறை தலைமையகம் மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: