மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்


மத்திய வங்கியினால் புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் W.D. லக்ஷ்மனினால் பிரதமரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் W.D. லக்ஷ்மன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே குறித்த புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள், பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்திப்பின்போது நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: