மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு


மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஹெரோய் போதைப் பொருளுடன் 159 பேரும், கஞ்சா போதைப் பொருளுடன் 111 பேரும், ஹயிஸ் போதைப் பொருளுடன் 18 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: