தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் இன்றும் கொழும்பில் ஆர்ப்பாட்டம்


கொழும்பில் இன்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்  எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்ப்பில் ஈடுபட்ட இரண்டு தரப்பினர் நேற்றிரவு முழுவதும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலும் தங்கியிருந்தனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்றிரவு தங்கியிருந்த வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு வாக்குறுதியளிக்கப்பட்டவாறு அரச தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இன்று அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலிருந்து அலரி மாளிகை வரை பேரணியாகச் சென்றனர்.

அவர்களில் 10 பேருக்கு பிரதமரின் உதவி செயலாளர், மேலும் ஒரு அதிகாரியை சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

இதேவேளை, கடந்த வருடம் மே மாதம் வௌிவாரி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த சிலர் இன்று இரண்டாவது நாளாகவும் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: