புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளான பாடசாலை சிற்றுார்தி


நேற்று காலை கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை வீதியில் பாடசாலை சிற்றுார்தி ஒன்று கொழும்பு - சிலாபம் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுவதோடு,சிற்றுார்தியில் பயணித்த 17 மாணவர்கள் மற்றும் அதன் சாரதி ஆகியோர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: