கண்டி-பூவெலிகட பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் நிறைவு


கண்டி-பூவெலிகட பகுதியில் உடைந்து வீழ்ந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் போது உரிய சட்டவிதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் பெற்றோரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

மேலும், ஐந்து மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் இதுவரையில் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை என சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும்,பிரதேசவாசிகளும் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: