பொம்மைகள் உள்ளிட்ட சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை


பொம்மைகள் உள்ளிட்ட சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான செயற்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் இத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊதப்பட்ட பலூன்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதிய உணவுத் தாள்களைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன்களுக்கு மட்டுமே சில விதிமுறைகளுடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உற்பத்தியாளர்கள் இப்போது மக்கும் தன்மையுடைய பொலித்தீனை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுடன் அனுமதியளிக்கப்பட்ட தரத்தை மீறிச் செயற்படும் உற்பத்தியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாய நடவடிக்கைகளில் கால்வாய்களில் அகற்றப்படும் வேதிப்பொருட்கள் அடங்கிய பூச்சிக்கொல்லி மருந்துப் போத்தல்கள் சுற்றுச்சூழலுக்கு கடுமையான தீங்கு விளைவிப்பதாகவும், அவை குறித்து உதிர்காலத்தில் விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments: