நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நேபாளம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த 229 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து 203 இலங்கையர்கள் நேற்று இரவு 8.50 மணியளவிலும், நேபாளத்தில் இருந்து 26 இலங்கையர்கள் நேற்று மாலை 5.20 மணியளவிலும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: