மலையகத்தலைமைகள் ஏன் மௌனம் ? -அனுஷா சந்திரசேகரன்


இலங்கை அரசியலமைப்பின் 19வது சீர்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களையும் 1978ம் ஆண்டு இலங்கை அரசியல் அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களையும் ஓரளவு குறைத்து பாராளுமன்ற ஜனநாயக முறைமையை பலப்படுத்த முயலும் விதமாக 19வது திருத்தச்சட்டம் அமைக்கப்பட்டது. 
19வது திருத்தச்சட்டம் பல விடயங்களை கொள்கை ரீதியாக குறிப்பிட்டிருந்தாலும் அவ்விடயங்களில் பலத்தையும் முழுமைப் படுத்திருக்கவில்லை முக்கிய உதாரணமாக ஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்கும் போது பிரதமரின் ஆலோசணையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அமைச்சரவை நியமனங்களில் சரியான சட்ட வரைபுகளை உள்ளடக்கவில்லை ஆகவே முழுமையாக 19வது சீர்த்திருத்தம் ஜனநாயக தன்மையுடைய ஏற்பாடு என்பதையும் இதனை இரத்து செய்து மீண்டும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை 19வது 

திருத்தத்திற்கு முன்னர் இருந்ததை போலவே அமுல்படுத்துவது சர்வாதிகார ரீதியானது என்ற சரத்தை முன்வைப்பதை விட 20வது திருத்தத்ததையும் அதனுடைய சட்ட அமுலாக்கத்தையும் தெளிவாக விளங்கி சிறுபான்மை மக்களுக்கு சாதக பாதகமான விளைவுகளை ஆராய்ந்து மலையக பாராளுமன்ற பிரதிநிதிகள் தமது ஆதரவையோ அல்லது முழுமையான எதிர்ப்பையோ வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தச்சட்டம் மற்றும் 13 வது சரத்தை நீக்குவது பற்றிய சமீபத்திய கள நிலவரம் சம்பந்தமாக தனது காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் nhதடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது.
இந்தியவம்சாவளி தமிழர்களாக இலங்கையில் 200 வருடங்களுக்கு மேலாக மலையகத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் இனப்பிரச்சினைகளிளை எதிர்கொண்ட வடகிழக்கு தமிழர்கள் முஸ்லிம் மக்கள் என சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வுகளையம் உரிமைகளையும் பெறுவதற்கு எந்த திருத்தச்சட்டம் ஏற்புடையது என்பதனை எமது தலைமைகள் முதலில் இணங்கான வேண்டும். அரசியல் உரிமைகள் பற்றிய முன்மொழிகளை தெளிவாக முன்வைக்க வேண்டும்.

அதற்கு முன்னோடியாக மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக என்னென்ன உரிமைகளுக்கு உரித்தானவர்கள் என்பதில் நாம் ஒருமித்த இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும்.

இன்று நிறைவேற்றப்படவுள்ள திருத்தச்சட்டங்களில் எமது சிறுபான்மை மக்கள் சார்ந்த உரிமைகள் எமது நிலையான அடையாளங்கள் எவ்வாறு பதியப்பட போகின்றன என்பதுதான் எம் அணைவரின் முன்னுள்ள பிரதாக கேள்வியாகும்.

மலையக சமூகத்தை பொருத்தவரை இலங்கை இனப்பிரச்சினை தீர்வின் ஒரு கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளாக இருக்கட்டும் அல்லது பிரதேசசபை நகரசபைகளாக இருக்கட்டும் இவ்வாறான சபைகளின் ஊடாக எமது சமூகம் சார்ந்த நலன்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? 

வாக்களிப்பதனை தவிர எமது சமூகம் இந்த சபைகளின் ஊடாக தமது வாழ்க்கை முறையை உயர்த்திக் கொள்ளும் சரத்துக்கள் உள்ளனவா?

இன்றும் கூட பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு கட்டுப்பட்டு வாழும் எமது சமூகம் இவ்வாறான சபைகளின் ஊடாக என்ன பயன் பெறப்போகிறது என்பதனை பொருத்துதான் இந்த அனைத்து சரத்துக்களிலும் உள்ள சாதகபாதகங்களை நாம் ஆராயவேண்டி உள்ளது.

அல்லது ஆதரவு கொடுக்க வேண்டியுள்ளது. ஏதாவது சரத்துக்களின் ஊடாக எமது சமூகத்தின் அரசியல் உரிமைகளு;ககு உத்தரவாதம் வழங்கப்படும் போது இனவாத அமைப்புக்களிடமிருந்து வருகின்ற எதிர்ப்புக்களையும் நாம் வெறுமனே உதாசீனப்படுத்த முடியாது.

இன்னும் கூட எமது சமூகம் தினக்கூலி குழுவாக எனையவர்களால் ஏளனமாக பார்க்கப்படும் நிலை மாற்றப்பட்டு நாம் கௌரவமான பிரஜைகளாக தேசிய அந்தஸ்துடன் அரச நீரோட்டத்தில் உள்வாங்கப்படும் போதுதான் இவ்வாறான எந்தவிதமான எல்லா திருத்தச்சட்டங்களின் ஊடாகவும் நாம் பயன் பெற முடியும்

அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஊடாகவோ அல்லது ஜனநாயக பண்புகளுடனான பாராளுமன்ற அமைப்பின் ஊடாகவோ அல்லது சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் தகவல் அறியும் சட்டங்களின் ஊடாகவோ எமது சமூகம் எந்த நன்மையுமே பெறாது.

இவ்வாறான திருத்தச்சட்டங்கள் எந்த அரசினால் கொண்டுவரப்படும் போதும் மலையகத்தலைமைகள் மௌனம் காப்பது போல் இம்முறையும் கடைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் 

ஆதரவளிப்பதா எதிர்ப்பதா என்பதனை விட எம் மக்களுக்கு சிறந்த முறை எது என்பதனை முன்மொழிவதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சி பாராளுமன்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உருப்பினர் என்றிராமல் சிறுபான்மை மக்களுக்கு உகந்த தீர்வை அனைவரும் இணைந்து முன்மொழிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

No comments: