பெரியநீலாவணை விஸ்ணுமகா வித்தியாலத்தில் சுவரோவியங்கள் திறந்து வைப்பு

செ.துஜியந்தன் 


கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட தமிழ்க்  கல்விக் கோட்டத்திலுள்ள பெரியநீலாவணை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் சுவரோவியங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு உத்தியோக பூர்வமாக இன்று(08) பாடசாலை அதிபர் பி.கமலதாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை தமிழக்கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து கலந்து கொண்டார். அத்துடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.குபேரன், பிரதி அதிபர் திருமதி பி.சந்திரசேகரம், கருணை உள்ளம் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் ஏ.ரஜீதன், உட்பட பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் தேசத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பொது இடங்களிலுள்ள சுவர்களில் சுவரோவியங்கள் வரையும் பணிகள் கல்முனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

அந்தவகையில் பெரியநீலாவணை விஸ்ணு மகா வித்தியாலயத்தின் சுவர்களில் கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் பாடசாலை மாணவர்களையும், பொதுமக்களையும் விழிப்புணர்வூட்டக்கூடிய வகையில் நவீன ஓவியங்கள் மற்றும் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பான ஓவியங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள், பிரதேச கலை, கலாசாரம் சார்ந்த படைப்புக்கள், பாரதியார், திருவள்ளுவர் போன்ற பெரியார்களின் படங்கள் ஆகியன தமிழ் இளம் ஓவியர்களினால் இங்கு தத்ரூபமாக வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: