கொழும்பில் இன்று நீர் விநியோகத்தடை அமுல்


அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 08 மணி தொடக்கம் அடுத்த நாள் காலை 6.00 மணிவரையிலான,10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு- 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு- 11 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: