திருக்கோவில் பிரதேச செயலகத்தில் காணி உத்தரவுப் பத்திரம் வழங்கி வைப்பு !(யதுர்ஷன்)

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட நாட்களாக அரச காணிகளில் குடியிருந்து பயிர் செய்கை மற்று விநடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டிருந்த உத்தரவுப்பத்திரம் இல்லாத காணிளுக்கு உத்தரவுப்பத்திரம் வழங்கல் மற்றும் உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டு இதுவரையில் அளிப்பு வழங்கப்படாத காணிகளுக்கான அளிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (17) திருக்கோவில் பிரதேச செயலாளர். த.கஜேந்திரன் தலைமையில் பிரசே செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் உத்தரவுப்பத்திரம் மற்றும் அளிப்பு பத்திரம் இல்லாத 207 பேருக்கு குறித்த பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ.திசாநாயக்க (மாகாண காணி ஆணையாளர், காணி நிருவாகத்திணைக்களம் திருகோணமலை) மற்றும் கிழக்குமாகாண உதவி காணி ஆணையாளர், தலைமை காரியாலய காணி உத்தியோகத்தர் காணி நிருவாக திணைக்களம் அம்பாறை மாவட்ட செயலகம், திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர், திருக்கோவில் பிரதேச செயலக உதவி திட்மிடல் பணிப்பளார் உள்ளிட்டோர்; பங்கேற்றிருந்தனர்.


No comments: