மத்திய முகாமில் பயிர் சிகிச்சை முகாம்

 செ.துஜியந்தன்


அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தினால் விவசாயிகளை அறிவூட்டும் பயிர் சிகிச்சை முகாம் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதனொரு அங்கமாக இன்று(10) அன்னமலை விவசாயபோதனாசிரியர் பிரிவிலுள்ள மத்தியமுகாம் ஐந்தாம் பிரிவில் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான பயிர் சிகிச்சை முகாம் விவசாயப் போதனாசிரியர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் இர்ஷாத், விவசாய தொழிநுட்ப உதவியாளர் கஜானந் உட்பட விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர். இங்கு விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்களில் ஏற்படும் நோய்ப்பீடைத் தாக்கம் தொடர்பலும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது. 

No comments: