மட்டக்களப்பு பகுதியில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு
மட்டக்களப்பு – வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை – மீறாவோடை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பற்றைக்காட்டிலிருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட துப்பாக்கி, வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுவாஞ்சிக்குடி பகுதியிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட துப்பாக்கி கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகம் அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்பட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: