மின் கட்டணங்கள் செலுத்துவது தொடர்பில் வெளியான தகவல்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள,சுற்றலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ஒரு வருட சலுகைக் காலம் வழங்குமாறு பிரதேச பொறியியலாளர் காரியாலயங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 வரையான கட்டணங்களை செப்டம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாதங்களுக்கு தவணை முறையில் செலுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,இக்காலப்பகுதியில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டாமெனவும் பிராந்திய பொறியியலாளர் காரியாலயங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: