தொன்மையான முறக்கொட்டான்சேனை ஸ்ரீ முத்துமாரியம் ஆலய மஹா கும்பாவிசேகத்தையிட்டு பாற்குடப்பவனி

கனகராசா சரவணன்  

தொன்மையான ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்
ஆலயத்தின் நூதன பிரதிஸ்டா மஹாகும்பாபிசேகத்தின் இறுதி நாளாகிய இன்றைய தினம் ஆலயத்தில் தீ மிதிப்பு, பாற்குடப் பவனி, 1008 
சங்காபிசேகம் என்பன ஆலயத்தில் விசேடமாக இடம்பெற்றது.

கடந்த 16ம் திகதி அம்பிகைக்கு கும்பாவிசேகம் இடம்பெற்றதையடுத்து ஆலயத்தில் தொடர்ச்சியாக 12 நாட்கள் மண்டலாபிசேக பூசைகள் நடைபெற்றது.

இன்றைய தினம் மண்டலாபூர்த்தியை முன்னிட்டு தம்பிமுத்து சின்னத்தம்பி, சின்னத்தம்பி இந்திராதேவி, மகேந்திரன் நிஸ்யந்தி குடும்பத்தினரால் 1008 சங்கபிசேகம் மற்றும் பாற்குடப்பவனி போன்ற விசேட பூசைகள் இடம்பெற்றது.

வசந்த மண்டபத்தில் எளுந்தருளிய அன்னைக்கு பூசை இடம்பெற்றதும் அன்னை அலங்கரிக்கபட்டு வெளிவீதி வந்ததும் தீ மிதிப்பு இடம்பெற்றது, இதன்போது தங்களின் நேர்த்திக்கடன்களை  நிவர்த்தி செய்யும்பொருட்டு பலர் தீ பாய்ந்ததுடன் முறக்கொட்டான்சேனை விஸ்ணு ஆலயத்தில் 
இருந்து இடம்பெற்ற பாற்குடப் பவனியிலும் பெருமளவானர்வர்கள் கலந்தகொண்டிருந்தனர்.
ஆலயத்தில் கும்ப யாக பூசை இடம்பெற்றதும் ஆலயத்தில் இருந்து எழுந்தருளப்பெற்ற பிரதான கும்பம் அன்னையவளுக்கு சொறியப்பட்டு அபிசேகப் பூசை இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற பூசைகளில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு தாக சாந்தி மற்றும் அன்னதானம் என்பன ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இறுதி நாளாகிய இன்றைய தினம் பிற்பகல் அன்னையவளுக்கு பொன்னூஞ்சல் மற்றும் விசேட பூசைகளும் இடம்பெற்று
அனைத்து பூசைகளும் முடியவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: