இந்த வருடத்திற்காக தேசிய கல்வி கலாசாலைகளுக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

2018ம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சை  பெறுபேறுகளுக்கமைய இந்த வருடத்திற்காக தேசிய கல்வி கலாசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பிலான வர்த்தமானி இன்று பிரசுரிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் முறைமையினால் மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கமான www.moe.gov.lk க்கு பிரவேசித்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும் எனவும், இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 011-2787303,011-2787385,011-2787397 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: