எண்ணெய்க் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீ பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது


நியூ டயமன்ட் மசகு எண்ணெய்க் கப்பலில் மீண்டும் பரவிய தீ தற்போது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இரசாயனப் பொருட்கள் மற்றும் நீரைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்தம் நடவடிக்கை தொடர்வதாக இலங்கை கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நியூ டயமன்ட் பரவிய தீ  நேற்று முன்தினம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் நேற்று பகல் கப்பலின் நடுப்பகுதியில் அவ்வப்போது தீ ஏற்பட்டதாகவும்,நிலவும் சீரற்ற வானிலையால் மீண்டும் தீ பரவியதாகவும் கடற்படை நேற்று பிற்பகல் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கமைய மீண்டும் இன்று தீயணைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.No comments: