இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா மக்களுக்கு நிவாரண உதவி

வவுனியா கணேசபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் காற்று மற்றும் மழையின் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பலத்த காற்றின் காரணமாக 35 வீடுகளும் அவ் வீட்டைச் சேர்ந்த 35 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அது மட்டும் அன்றி தினக்கூலியாக வேலை செய்து தங்களது தின வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் இக் கிராம மக்களின் நிலை பரிதாபமாக காணப்படுகின்றமையை அவதானிக்க முடிய கூடியதாக இருந்தது. பாடசாலை செல்லும் மாணவர்களின் பாடசாலை உபகரணங்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட வவுனியா கணேசபுர மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை சமூக சேவையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளருமான ரசிகா பிரிய தர்ஷினி அவர்கள் நேரடியாக சென்று அக் கிராம மக்களுக்கு வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வியை மீண்டும் தொடர தான் உதவி செய்வதாகவும் தெரிவித்தார்


No comments: