வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு


வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோறுக்கு இன்று முதல் ஆரம்பமாகினற வாரமுமு், அபராதம் விதித்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பன எடுக்கப்பட மாட்டாது என காவற்துறை ஊடகப் பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, நேற்று காவற்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

எனினும் சட்ட நடவடிக்கைகளை மீறும் சாரதிகளை அழைத்து விளக்கமளிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2 ஒழுங்கைகள் கொண்ட வீதியில் பேருந்து,முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி என்பன இடதுபக்க ஒழுங்கையில் பயணிக்க வேண்டும் எனவும் ஏனைய வாகனங்கள் இரண்டாவது ஒழுங்கையில் செல்ல வேண்டும்.

பயணிகளை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு பேருந்து நிலையங்களில் அல்லது வேறாக இடம் காணப்படுமாயின் பேருந்து அந்த இடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும்.வேறாக இடங்கள் ஒதுக்கப்படாத பேருந்து நிலையங்ளில் வீதிகளுக்கு தடை ஏற்படாதவாறு பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும்.

சுற்றுவட்டங்கள்,சந்திகள் அல்லது மாற்று வீதிக்குச் செல்லும் போது மாத்திரமே மற்றைய ஒழுங்குகளில் வாகனங்களைச் செலுத்த முடியும்.

3 ஒழுங்கைகள் காணப்படும் வீதிகளில் இடது பக்க முதலாவது ஒழுங்கையில் பேருந்து,முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி என்பன மாத்திரமே பயணிக்க முடியும்.

இரண்டாவது ஒழுங்கையில் பேருந்து தவிர்ந்த ஏனைய வாகனங்கள் பயணிக்க முடியும் எனவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் பிரதான 4 வீதிகளை மையமாகக் கொண்டு காலை 6 மணிமுதல் 9 மணிவரையும்,மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையும் வீதி ஒழுங்கைச் சட்டம் கடந்த 14ம் திகதி மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments: