நாட்டில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்


நாட்டில் நேற்றைய தினம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் இருந்து வந்த 5 பேருக்கும்,இறுதியாக தொற்றுக்குள்ளான மூவரும்  ஐக்கிய அரபு இராச்சியம்,சிங்கப்பூர் மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3155 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுறுதியான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று  வந்தவர்களில் நேற்றைய தினம் 9 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதோடு, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2955 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுறுதியான 188 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments: