கட்டாரிலுள்ள இலங்கைத் துாதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
கொரோனா தொற்றுக் காரணமாக கட்டாரிலுள்ள இலங்கைத் துாதரகத்தை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த காரியாலயத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதிவரை மூடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: