வாகன விபத்தில் இருவருக்கு காயம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


அட்டன் கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சிறுகாயங்களுக்குள்ளானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் குயில்வத்தை பகுதியில் அட்டனிலிருந்து கினிகத்தேனை நோக்கிச்சென்ற முச்சக்கரவண்டி வளைவு ஒன்றில் செல்கையில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கண்டியிலிருந்து அட்டன் வந்த இ.போ.ச பஸ்ஸில் மோதுண்டுள்ளது,

நேற்று மாலை 05 மணிக்கு இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து  தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments: