கொட்டகலையில் அனுமதியின்றி மயிலும் மானும் வளர்த்த ஒருவர் கைது

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


அனுமதியின்றி வளர்த்து வந்த மான் மற்றும் மயில் ஒன்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கிய தகவலுக்கமைய திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை வூட்டன் பகுதியிலுள்ள பண்ணையொன்றிலிருந்தே மான் மற்றும் மயில்  என்பவற்றை நேற்று  (25/09.2020)பிற்பகல் வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

மான் ஒன்றையும் மயில் ஒன்றையும் மீட்ட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மீட்கப்பபட்ட வன விலங்குகளை வனவிலங்கு சரணாலயத்திற்கு ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர்.


No comments: