கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி


தேசிய கல்வியற் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அதிலுள்ள பிழைகளை திருத்திக்கொள்ளவும் மீள் பரிசீலனை செய்துக்கொள்ளவும் கல்வி அமைச்சு 4 நாட்கள் கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையும் www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பதாரிகள் பூர்த்தி செய்ய முடியும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: