பலாங்கொட பொகவந்தலாவ பிரதான வீதியில் பெக்கோ இயந்திரம் ஒன்று குடைசாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 

பின்னவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாங்கொட பொகவந்தலாவ பிரதான வீதியில் பின்னவலை புதுக்காடு பகுதியில் பாரிய பெக்கோ இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு பயணிகள் அசெளகரியங்களை எதிர் நோக்கியுள்ளதாக பின்னவலை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் 05.09.2020.சனிக்கிழமை பிற்பகல் 12.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  


பின்னவலை பகுதியில் இருந்து மரத்தென்ன பகுதி வரை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கும் போது பாரிய உயர் வங்கு பகுதியில் பெக்கோ இயந்திரத்தினை பயன்படுத்தி மண் வெட்டும்  நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம்  ஏற்பட்டதாகவும் பெக்கோ இயந்திரத்தின் சாரதி உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த வீதியின் நடுப்பகுதியில் பெக்கோ இயந்திரம் விபத்துக்குள்ளானதினால் குறித்த வீதியின் ஊடாக  மாற்று  வழி போக்குவரத்தினை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 
இதேவேளை பலாங்கொட பகுதியில் இருந்து பொகவந்தலாவ மரத்தென்ன பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் புதுக்காடு பகுதியில் நிறுத்தப்பட்டு ஹட்டனில் இருந்து பலாங்கொட நோக்கி பயணிக்கும் பேருந்து குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டு பயணிகள் சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து சுமார் அரைகிலோமீற்றர் தூரம் கால் நடையாக பயணித்து பேருந்துகளில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதேவேளை இதுவரையிலும் குறித்த வீதியின் போக்குவரத்து சீர்செய்யவில்லை எனவும் அதற்கான நடவடிக்கையினை பின்னவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும்  குறிப்பிடப்படுகிறது.No comments: