மனித பாவனைக்கு ஒவ்வா உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் சிக்கியது(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் வாராந்த விஷேட சந்தை ஞாயிற்றுக்கிழமை (27) பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டன.

இதில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத பெருமளவு உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

கோறளைப்பற்று தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்திய அதிகாரி டொக்டர் திவாகரன் தலைமையில் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் இ. இன்பராசா மற்றும் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது பழுதடைந்த விளாம்பழம், வெங்காயம், வாழைப்பழம், கரட மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள் தூள் உட்பட பல உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

அத்துடன், குறித்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் ஏனைய வியாபாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
No comments: