கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கான அறிவித்தல்


கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பவர்கள் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சுதத் சமரவீர இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியானது இன்று முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதோடு,இந்நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: