நேற்றைய தினம் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்படவில்லை


இலங்கையில்  நேற்றைய தினம் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லையென சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 3123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் 2926 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அதேநேரம் தொற்றுக்கு உள்ளான 185 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றதாகவும், 12 பேர் கொரோனா தொற்றுக் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 56 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments: