வெலிக்கடை சிறைச்சாலைக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை


வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில்   தடைசெய்யப்பட்ட பல பொருட்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலைகளுக்குள் போதைப் பொருள் பாவணை மற்றும் கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக  புலனாய்வு அதிகாரிகளின்  ஆலோசனைகளுக்கமைய  சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சிறைச்சாலையின் மகளிர் பிரிவில்  முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில்   13 கையடக்க தொலைபேசிகள் , 4 சிம் அட்டைகள் 150 மின்கலங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: