பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் இலங்கையில்


மணிரத்தினத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்படிப்பை அடுத்தவாரம் இலங்கையில் மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார்.கொரோனா தொற்றினால் நிறுத்தப்பட்ட இப்படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளமையினால் பொன்னியின் செல்வன் படக்குழு  அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக படக்குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி இலங்கைச் செல்ல உள்ளதாகவும் அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: