பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கான அறிவிப்பு


பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அதிக போதை ஊட்டக்கூடிய மாத்திரைகளை கொடுத்து மயங்கச் செய்து அவர்களின் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடிக்கின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணிக்கின்ற சில பேருந்துகளில் சில பயணிகளை ஏமாற்றி அவர்களுக்கு அதிக போதை ஊட்டக்கூடிய மாத்திரைகளை உணவுடனும் குடி நீருடனும் கொடுத்து அவர்களை மயங்கச் செய்து அவர்கள் நித்திரையாகிய பின்பு அவர்களிடம் உள்ள பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்துச் செல்லும் நபர்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்ட்ட 8 பேர் கடந்த வாரங்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நுவரெலியா வைத்தியசாலை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கமும் பொலிஸாரும் இது தொடர்பாக மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தனியார் அரச பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் அதிகாரிகளும் அதிக கவனத்துடன் செயற்பட முன்வரவேண்டும் இல்லாவிட்டால் இந்த நிலைமை ஏனைய பகுதிகளிலும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: