தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு தம்மை அழைக்க வேண்டாம்- ஜனாதிபதி தெரிவிப்பு


ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக, தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு தம்மை அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மக்கள் நலன் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்தல் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்தல் ஆகிய செயற்பாடுகளுக்காக குறித்த நேரத்தை ஒதுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தனிப்பட்ட நபர்களின் நிகழ்வுகள், பரிசளிப்புக்கள், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளதாக  ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளதோடு, ஜனாதிபதி தமது கடமை நேரத்துக்கு மேலதிகமாக கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரங்களையும் மக்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: