ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் வேன் மற்றும் சிறியரக லொறியும் மோதுண்டு விபத்துக்குள்ளானது

 பொகவந்தலாவ  நிருபர்.சதீஸ்


ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியின்
டிக்கோயா தரவலை பகுதியில் வேன் ஒன்றும் சிறியரக லொறி ஒன்றும் நேருக்கு
நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 18.09.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

டிக்கோயா போடைஸ் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சிறியரக லொறி
ஒன்றும் ஹட்டன் பகுதியில் இருந்து போடைஸ் பகுதியினை நோக்கி பயணித்த வேன்
ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு பயணித்த
எவருக்கும் எவ்வித காயங்களும்  ஏற்படவில்லையெனவும் ,குறித்த வாகனம்
இரண்டிற்கும் பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின்
ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்த தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: