ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வுகள் காலை ஆரம்பம்


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வுகள் முற்பகல் 10.30 க்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் பிற்பகல் 10.30 முதல் மாலை 6.30 வரை சபை அமர்வுகள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாலை 6.30 முதல் 7.30 வரை எதிர்க்கட்சியினரின் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளதோடு,நாளைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: