ஹட்டனில் போலி வைத்தியர் கைது

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


அக்குபஞ்சர் நோய்க்கான வைத்திய ஆலோசனை வழங்கும் போலி வைத்தியர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 14 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு ஹட்டன் ஹிஜிராபுரம் பகுதியில் இன்று 08.09.2020 கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹட்டன் பிரதேச மக்கள் அட்டன் ஜும்மா ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய பள்ளிவாசல், நிர்வாகம் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்த முற்பாட்டுக்கமையவே மேற்படி போலி அக்குபஞ்சர் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட குறித்த நபரிடம் வைத்தியருக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்  ஹட்டன் ஹிஜிராபுரத்தில் வாரத்தில் நாளொன்றுக்கு வீடொன்றினை வாடகைக்கு பெற்று  மேற்படி சிகிச்சைக்கான ஆலோசனையை வழங்கி வந்துள்ளார். இவ்வாறு தொடர்ச்சியாக மூன்றாவது முறை வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். சிகிச்சை தொடர்பில்,ஆலோசனைக்காக வரும் நபர்களிடம் தலா 800 ரூபாய் பணம் பெற்றும் வந்துள்ளார்,

குறித்த   வைத்திய ஆலோசனை வழங்குவது தொடர்பிலும் துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்துள்ளமை தெரியந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments: