பாராளுமன்றம் செல்லும் எண்ணம் தனக்கு இல்லை-பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு


தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணம் தனக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சில கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் தற்போது உள்ள நிலைமை குறித்து மகிழ்ச்சியும் திருப்தியும்  அடைகின்றேன்.

ஆகவே,  நாடாளுமன்றம் செல்வதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை.

இதேவேளை, 19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவேளை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை.

மேலும், 20வது திருத்தத்தின்  ஊடாக ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான அதிகாரத்தை மக்கள்தான் தற்போது வழங்கியுள்ளார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: