கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் மிகுந்த சேவையாற்றிய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பரிசு


நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், மிகுந்த சேவை ஆற்றிய பொது சுகாதார பரிசோதகர் பலருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் மோட்டார் சைக்கில்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கான நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதையும் பிரதிநித்துவப்படுத்தி, தெரிவு செய்யப்பட்ட 26 சுகாதார வைத்திய அதிகாரப்பிரிவுக்குட்பட்ட 749 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இதன்போது மோட்டார் சைக்கில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 56 பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் இதன்போது மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மற்றும் அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஜ்ஜீவ முனசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: