எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடீர் விஜயத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


இன்றைய தினம் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி , டன்பார் விளையாட்டு மைதானம் , கொட்டகலை ஆசிரியர் கலாசாலை மற்றும் கேம்பிரிட்ஜ் கல்லூரி போன்ற இடங்களுக்கு  இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 
எவ்வித முன்னறிவித்தலுமின்றி இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 

இதன்போது ஹட்டன் ஹைலண்ட்ஸ்  கல்லூரியின் நீண்டகால தேவையாக திகழ்ந்த  விளையாட்டு மைதானத்துக்கான எஞ்சிய கட்டுமான பணிகளுக்கான நிதியை ஒதுக்குவதோடு ஆரம்ப பிரிவில் காணப்பட்ட சிறுவர் விளையாட்டு திடலை புதுப்பிக்கும் செயற்பாடுகளுக்கும் நிதி ஒதுக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

மேலும் டன்பார் மைதானத்தில் காணப்படும் குறைபாடுகளை தீர்த்துவைக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்றக்கொள்ளப்பட்டன .

மேலும் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் அடையாளம் காணப்பட்ட  கல்லூரியின் நீர் , மலசலகூடங்கள் மற்றும் மின்சார குறைபாடுகளை உடனடியாக தீர்ப்பதற்காண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது என்னுடன் ஹட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் கொட்டகலை பிரதேச சபை  தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.எதிர்காலத்திலும் இவ்வாறான திடீர் விஜயங்கள் பிரதேசத்தின்  ஏனைய பகுதிகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு அடையாளம் காணப்பட்ட குறைகள் நிவர்த்திசெய்யப்படும் .என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


No comments: