கண்டியில் மீண்டும் ஏற்பட்ட நில நடுக்கம்

கண்டி-பல்லேகலை பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.06 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளது என புவிச் சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் இது பூகம்பமா அல்லது வேறு நிகழ்வா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இது குறித்த விசாரணைகள் புவிச் சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: