நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்குத் தீர்மானம்-சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர்
நாட்டில்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, வாராந்தம் ஊடகவியலாளர் சந்திப்புகளை ஏற்படுத்தி தொற்று நோயியல் பிரிவு உள்ளிட்ட அனைத்து பொறுப்புள்ள நிறுவனங்களின் அறிவுரைகளை பெறுவதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதோடு,இந்த நடவடிக்கையானது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: