விபத்துக்குள்ளான கப்பலின் தீ பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி தெரிவிப்பு

எம்.டி.நியூ டயமன்ட் எண்ணெய் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவலானது முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த எண்ணெய் கப்பல் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கப்பல் தற்போது நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் பலத்த காற்று வீசி வருவதாக கடற்படை ஊடக தொடர்பாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த கப்பலில் சிறிய அளவிலோ அல்லது மீண்டும் தீப்பற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: